சிவில்
என்ஜினீயரிங் என்பது மிகவும் பழமையான பொறியியல் துறைகளில் ஒன்று.
ஒருகாலத்தில் இதைப் படித்தால் அரசு வேலைக்குப் போகவேண்டும், அல்லது தனியார்
துறையில் குறைந்த சம்பளத்துக்கு வேலை பார்க்க வேண்டும் அல்லது ரோடு, இதர
கட்டுமான பணிகளை கன்ட்ராக்ட் எடுத்து செய்து சம்பாதிக்க வேண்டிய நிலை.
இப்போது அந்த நிலை மாறி, நல்ல சம்பளத்துடன் வேலை நிச்சயம்! என்ற நிலை
உருவாகி இருக்கிறது. தாராளமாக வெளிநாடுகளுக்கு சென்று வேலை பார்த்து
கைநிறைய சம்பாதிக்கவும் முடியும். தற்போது இந்தியாவின் Infrastructure
காலம். எங்கு பார்த்தாலும் பெரிய அளவில் ஏதேனும் ஒரு கட்டுமான பணிகள் நடந்த
வண்ணம் இருக்கின்றன. ஒரு புறம் தேசிய நெடுஞ்சாலைகள், தங்க நாற்கர சாலைகள்,
கிராம சாலைகள் என சாலை மேம்பாடு வேகம் காட்டிக் கொண்டிருக்கின்றது,
இன்னொரு புறம், இதற்கு இணையாக விமான நிலையங்கள் விஸ்தரிப்பு, ரயில் பாதையை
நாட்டின் அனைத்து பகுதிகளுக்கு கொண்டு செல்லுதல், மெட்ரோ ரயில் திட்டம்,
கப்பல் துறைமுகங்களின் எண்ணிக்கை அதிகரிப்பு, வடிகால் வசதி ஏற்படுத்துதல்
என பல்வேறு பணிகள் நடந்துக் கொண்டிருக்கின்றன. மேலும், தனியார் நிறுவனங்கள்
போட்டி போட்டுக் கொண்டு நகரங்களிலும், இதர பகுதிகளிலும் அடுக்குமாடி
குடியிருப்புகள், வணிக வளாகங்கள், ஹோட்டல்கள், மென்பொருள் நிறுவனங்கள் என
பல கட்டுமான பணிகளை மேற்கொன்டு வருகிறார்கள். மேலும் மின்நிலையங்கள்,
ரயில்வே பணிகள், வடிகால் பணிகள், குழாய் பதிவுகள், சாலைகள், பாலங்கள் என பல
வகையில் வடிவமைத்தல் மற்றும் கட்டுதலில் ஈடுப்படுகிறார்கள். இந்திய
Infrastructure துறையில், கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டும் 500 பில்லியன்
டாலர் அளவுக்கு முதலீடுகள் குவிந்திருக்கின்றன. இன்னும் மூன்று ஆண்டுகளில்
மேலும் 500 பில்லியன் டாலர் அளவுக்குத் திட்டங்களை எதிர்பார்த்து
இருக்கிறார்கள். தனியார் நிறுவனங்கள் ஒவ்வொன்றும் 10 ஆயிரம் கோடி ரூபாய்,
20 ஆயிரம் கோடி ரூபாய் என்ற அளவில் பிரமாண்ட திட்டங்களைச் செயல்படுத்த
ஆரம்பித்து விட்டார்கள். இதனால் வேலை வாய்ப்புகளுக்கு பஞ்சமில்லாமல்
இருக்கிறது. இதைத்தவிர, மலேசியா, சிங்கப்பூர் போன்ற கிழக்கு ஆசிய
நாடுகளிலும், ஐக்கிய அரபு நாடுகள், ஓமன், பக்ரைன், குவைத், சவுதி, கத்தார்
போன்ற மத்திய ஆசிய நாடுகளிலும் பெரிய அளவில் சிவில் இன்ஜினீயர்களுக்கு
டிமான்ட் இருக்கிறது. இதனால் அங்கு சென்றும் வேலை பார்க்கலாம். சிவில்
படித்தால் அரசுத் துறைகளில் ஆரம்ப சம்பளமாக 15,000 வேலை கிடைக்கிறது.
தனியார் நிறுவனங்களில் ஆரம்பத்தில் 20 ஆயிரம் ரூபாயில் ஆரம்பித்து
திறமைக்கு தகுந்தாற்போல் சம்பளம் வழங்குகிறார்கள். 2 to 3 வருடங்கள் வேலை
பார்த்து அனுபவம் பெற்றுவிட்டால், சம்பளம் பல மடங்கு உயரும்.
கட்டுமானநிறுவனத்தில் சேர்ந்து இரண்டு மூன்று ஆண்டுகள் அனுபவம்
சேர்த்துக்கொண்டு பிறகு தனி நிறுவனத்தைத் தொடங்கி முன்னேறலாம். எப்பொழுதும்
கட்டடங்களுக்கான தேவை இருந்துக்கிட்டேதான் இருக்கும் என்பதால்
வாய்ப்புகளும் தொடர்ந்துக் கொண்டே இருக்கும். மற்ற படிப்புக்கு இருக்கிற
போட்டி இதற்கு இல்லை என்பது சிறப்பு. மேலும் மற்ற படிப்புக்கான கட்டணத்தை
விட இந்த படிப்புக்கான கட்டணமும் குறைவாகவே இருக்கிறது. படித்து
முடித்ததும் சாப்ட்வேர் பணிகளுக்கு இணையான சம்பளம் வழங்குவதால் எந்த விதம்
சிரமமும் இல்லாமல் இந்த படிப்பை தேர்ந்தெடுக்கலாம். இத்துறையில் தற்போது
எனர்ஜி, பேரிடர் மேலாண்மை, சுற்றுச்சூழல் மேலாண்மை, டிரான்ஸ்போர்ட், ரிமோட்
சென்சிங் என ஏராளமான கிளைகள் விட்டிருப்பதால் சிவில்
என்ஜினீயரிங்படித்தால் வேலை வாய்ப்புகள் எப்படியும் கிடைத்துவிடும் என்ற
நிலை உருவாகி இருக்கிறது. இதனால் இந்த ஆண்டு சிவில் இன்ஜுனீயரீங்கை அதிக
மாணவர்கள் தேர்ந்தெடுப்பார்கள் என எதிர்பார்கலாம்.
No comments:
Post a Comment